40 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த பசுவை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகின்றார். இதில் விவசாயியான இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசுக்களை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த மாடு-1 அருகே இருந்த 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டுள்ளனர்.