டாஸ்மாக் திறப்பில்….. பொதுநலன் இல்லை….. நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!

தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்தது  குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பல மாநில அரசுகள் ஊரடங்கை தளர்வுகளுடன் தொடர்ந்து நீடித்து வருகின்றன.  இந்த ஊரடங்கின்  காரணமாக பல தொழில் துறைகள் முடங்கி தொழிலை முடக்கி சென்றாலும், நஷ்டம் இல்லாமல் லாபத்துடன் இயங்கக் கூடிய சிறப்பான துறையாக டாஸ்மாக் கடை தொடர்ந்து விளங்கிவருகிறது.

மதுபான கடையை தமிழகத்தில் திறந்ததற்காக பல சமூக ஆர்வலர்களும், குடும்ப பெண்களும் தொடர்ந்து தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளின் வருவாயில் அரசு நலத்திட்ட உதவிகள் செய்தாலும், மதுக்கடைகள் திறந்ததில்  பொதுநலன் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் மதுபான  கடைகளில் பாட்டில்கள்,பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு ஆகியவை  கடைபிடிக்கப் படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *