“உடல்நல குறைவு” செலவு செய்ய முடியல…. நீதிமன்றத்தில் தூக்கிட்டு ஊழியர் தற்கொலை…!!

அரியலூர் கோர்ட்டு அறையில் வைத்து ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்தில் இயங்க வருகின்றது. இந்த நீதிமன்றத்தில் தலைமை நிர்வாகியாக நெடுஞ்செழியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீழப்பெரம்பலூர் சொந்த ஊராகும். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் நீதிமன்றத்திற்கு வந்து அலுவலகப் பணி பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் நீதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஊழியர்கள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நெடுஞ்செழியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாவட்ட அமர்வு கோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து நீதிபதிகள் முன்னிலையில் நெடுஞ்செழியன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது அவரது சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர் அடிக்கடி உடல்நிலை பாதிப்புக்குள்ளானதை தெரிவித்துள்ளார். மேலும் வைத்திய செலவிற்காக அதிகளவிலான பணம் செலவாகும் என்பதால் எனது குடும்பத்திற்கும் எனக்கும் மனவேதனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தான் நான் இந்த முடிவை எடுத்தேன் எனவும் நெடுஞ்செழியன் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து நெடுஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *