மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கேஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.