மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இருளப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் இருளப்பனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply