14 வயது சிறுமிக்கு கொடுத்த தொல்லை…! போக்சோவில் கைது செய்து…. தரமான தீர்ப்பு எழுதிய நீதிமன்றம்… !!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தான கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கானது திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் வக்கீல் மல்லிகா என்பவர் அரசுத் தரப்பில் ஆஜரானார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ரூபாய் ஆயிரம் அபராதமும், 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்பளித்தனர். மேலும் அச்சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காக ரூபாய் 500 அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *