15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2.50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply