“கருணை அடிப்படையில் தூக்கில் போடுங்க” தம்பதியினர் அளித்த மனு…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சோழசிராமணி பகுதியில் முத்துசாமி என்பவர் வருகிறார். இவர் தனது மனைவியுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் சோழசிராமணியில் இருக்கும் கோவில்களில் பூஜை செய்து வந்தேன். கடந்த 2006-ஆம் ஆண்டு கலப்பு திருமணம் செய்ததால் பூஜை செய்வதற்கு என்னை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் நான் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சிரமப்பட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே நாங்கள் வாழ்வதற்கு வழி காட்ட வேண்டும், இல்லையெனில் 4 பேரையும் கருணை அடிப்படையில் தூக்கில் போட வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு பிரச்சனை மற்றும் அவமானங்களை சந்தித்ததால் இதற்கு மேல் வாழ்வதற்கு விரும்பவில்லை என அவர் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *