எம்பிபிஎஸ் நிறைவு செய்தவர்களுக்கான கவுன்சில் பதிவு…என்.எம்.சி தகவல்…!!!!!

இந்தியாவில் நிகழாண்டில் எம்பிபிஎஸ் நிறைவு செய்தவர்கள் தங்களது மாநில மருத்துவ கவுன்சில் தொழில்முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. இது குறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் ஷாம்பூ சரண்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 2022 – 23 கல்வியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் தங்களது மாநில மருத்துவ கவுன்சிலிங் மூலமாக தொழில் முறை பதிவை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் உள்ளுறை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். மேலும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார புதுப்பித்தல் நடவடிக்கைகளால் இதற்கு இடர் ஏற்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply