கொரோனா : இந்தியாவில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 45 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் 16 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *