தமிழகத்தின் 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் 23, தஞ்சையில் 49, தேனியில் 7, திருவண்ணாமலையில் 77, திருவாரூரில் 30, தூத்துக்குடியில் 2, நெல்லையில் 28, திருப்பூரில் 4, திருச்சியில் 36, வேலூரில் 87, விழுப்புரத்தில் 30, விருதுநகரில் 13 என இன்று 33 மாவட்டங்களில் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், கேரளாவில் இருந்து வந்த 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 10, கர்நாடகாவில் இருந்து 12, ராஜஸ்தானில் மற்றும் டெல்லியில் இருந்து வந்த தலா 3 பேர், தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *