சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி ? மேலும் 22 பேருக்கு சிகிச்சை..!!

துபாயிலிருந்து சென்னைக்கு  வந்த 14 நபர்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பூந்தமல்லி மருத்துவ மனையில் மட்டுமே மொத்தம் 22 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரைக்கும் தமிழகத்தில் ஒருவருக்கும் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டு , அவர் முழு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.