மீனம்பாக்கத்தில் சோதனை….. சென்னை வாலிபருக்கு கொரோனா அறிகுறி….. சக பயணிகள் பதற்றம்…..!!

பிரேசிலில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா  வைரஸ் அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய பயணிகள் கடும் பரிசோதனைகளுக்கு பின்பே சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவர். அதற்கான காரணம் வைரஸ் பரவிவிடகூடாது என்பதற்காகவே,

இந்நிலையில் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில், வந்த இந்திய பயணிகளை சிறப்பு மருத்துவக் குழுவினர் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில்,

சென்னை கீழ்கட்டளை பகுதியை  சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சளி இருப்பது கண்டறியப்பட்டது. இது வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஷ்குமார் பிரேசிலில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.