தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை!!

கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 363 பேர் குணமடைந்துள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர்மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 11 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல பிலிப்பைன்ஸ் மற்றும் லண்டனில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

41 அரசு பரிசோதனை மையங்களும், 27 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா உள்ளதா என இன்று மட்டும் 12,155 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,97,340 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது தனிமை கண்காணிப்பில் இருந்த 5,518 பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *