கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 8 பேர்….. தமிழகத்தில் 26ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் உத்திரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 நாளில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது என சசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் மூலம் உறுதி செய்தார். மிகவும் வருந்தத்தக்க செய்தியாக பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்ததுள்ளது.

63 வயதுள்ளவர் துபாயில் இருந்து வந்தத 63 வயது முதியவருக்கு , தாய்லாந்தை சேர்ந்த 66 வயது முதியவருக்கும் , 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 வயதான இளைஞருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் , துபாயில் இருந்து வாலாஜா அரசு மருத்துவமனையிலும், தாய்லாந்து நாட்டை  சேர்ந்தவருக்கு பெருந்துறை மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மூன்று பேரின் உடல்நிலை  நன்றாக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலை 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *