ஊரடங்கு உத்தரவு ஏன் கடைபிடிக்கிறோம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
பிரெஞ்சு மொழியில் curfew என்றால் நெருப்பை மூடுவது என்று பொருள். இது பின்னொரு காலத்தில் பிரிட்டிஷார்களால் ஆங்கிலத்தில் மருவப்பட்டு சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனோக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்.
இந்த சுய ஊரடங்கு உத்தரவு பல்வேறு உலக நாடுகளில் வன்முறை மற்றும் கொடிய நோய்கள் பரவும் சமயத்தில் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் அக்காலகட்டத்தில் தீவிர பாதிப்புகள் ஏற்படுவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் நிலைமையை சீராக்க பெருமளவில் உதவும்.
பிரதமர் எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும். அரசோடு இணைந்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து களத்தில் இறங்கி தொண்டாற்றி வருகின்றனர். இத்தனை முயற்சியும் நாம் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கொரோனோ வைரஸிடம் இருந்து நம்மை நாமே பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதுவே அரசுக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவியாகும்.