“கொரோனா வைரஸ்” நல்ல செய்தி….. அரசு தான் நிர்ணயிக்கும்…… பேரவையில் அமைச்சர் பேச்சு….!!

கொரோனோ வைரஸ் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து தயாரிப்பதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை காய்ச்சல், சளி, இருமலுக்கு என்ன மருந்தோ அது தான் கொடுக்கப்பட்டு வருவதாக சட்டமன்றத்தில் பேசிய விஜயபாஸ்கர்,

விரைவில் கொரோனோ வுக்கு மருந்து  கண்டுபிடித்து விட்ட நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டாலும் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்கும் என்று தெரிவித்துள்ளார்.