கொரோனா தொற்றால் கணவரை  இழந்த…கபடி வீராங்கனை தேஜஸ்வினிக்கு ….விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி …!!!

கொரோனா  தொற்றால் கணவரை  இழந்த , இந்திய கபடி வீராங்கனைக்கு நிதி உதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2010 மற்றும் 2014 ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று,  இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றிருந்தார்  தேஜஸ்வினி பாய் . கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வினி பாய், சிறந்த வீராங்கனைக்காக  அர்ஜுனா விருதையும் பெற்றிருந்தார். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தேஜஸ்வினி பாய்க்கும் ,அவருடைய கணவர் நவீனுக்கும் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேஜஸ்வினி பாய் தொற்றிலிருந்து மீண்டுள்ளார். ஆனால் அவருடைய கணவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கொரோனா தொற்றால்  கணவரை பறிகொடுத்த வீராங்கனை தேஜஸ்வினி பாய்க்கு , உதவி செய்ய வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்காண தேசிய நல நிதியின் மூலமாக ரூபாய் 2  லட்சம் தேஜஸ்வினி பாய்க்கு வழங்க அனுமதி அளித்துள்ளது. இதுபற்றிய வீராங்கனை தேஜஸ்வினி பாய் கூறும்போது, இறந்த என்னுடைய கணவருக்கு 30 வயதுதான். ஆனால் அவருடைய தந்தை இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மிகுந்த பயமும் மன அழுத்தத்துடன் காணப்பட்டதே  அவருடைய உயிரை பறித்து விட்டது. இந்நிலையில் விளையாட்டு அமைச்சகம் ,எனக்கு இந்த நிதி உதவியை வழங்க முடிவெடுத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும், என்னைப் போல் பலரும் நிதி பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.  எனவே அவர்களுக்கும் நிதி உதவி கிடைத்தால், நன்றாக இருக்கும்.  எனது 5 மாத பெண் குழந்தையை ,இந்த நிதி உதவியின் மூலம் அவருடைய வருங்கால தேவைக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *