எல்லாம் தயாரா இருக்கு…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…. ஆட்சியரின் தகவல்….!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, ஒமைக்ரான் மிக விரைவாக பரவி வரும் தொற்றாக இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அதன்பின் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது எனவும், குளிர் சாதனங்களை உபயோகிக்க கூடாது என்றும், உணவகங்களில் 50 நபர்களுக்கு மேல் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் தங்களின் பயணங்களை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா உறுதியான நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றது. பின்னர் இம்மாவட்டங்களில் ஆய்வை மேற்கொண்ட நபர்களில் 10% மேல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து செல்லுமாறு கலெக்டர்  கூறியுள்ளார். எனவே உணவகங்களில் கூட்டம் கூடி சாப்பிடுவதால் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இம்மாவட்டம் முழுவதும் 3,700 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றது எனவும், பாதிப்பிற்கு தகுந்தபடி வீட்டில் வைப்பதா அல்லது மையங்களில் வைப்பதா என முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *