அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. பலியாகும் பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனா தொற்று பரவலினால் மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது  74,00,739 ஆக அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,35,147 ஆகும். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 24,673 பேர் குணமாகி வீடு திருப்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 59, 58, 691 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது 13,06,906 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *