திரை பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா…. பிரபல நடிகைக்கு தொற்று உறுதி…!!

பிரபல நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் நான் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.