கொரோனா பரவலால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு… புதிய விதிமுறைகள் அமல்…!!

கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருவதால்திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதி முறைகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் பரவி இருந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் முழு ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்தி கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி வந்தனர். அதன்பின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனாவின்  தாக்கம் அதிவேகமாக பரவிக் கொண்டு வருகின்றது. இந்த தொற்றால்  தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வுடன் புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்றிலிருந்து அமல் படுத்தியுள்ளது. அந்த புதிய விதிமுறைகள் என்பது, பக்தர்கள் மறுநாள் தரிசன டோக்கன் பெற்று முந்தைய நாள் மதியம் ஒரு மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், அதேபோன்று மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு முந்தைய நாள் காலை 9 மணிக்குப் பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் கூறுகின்றது.

இந்த அறிவிப்பினை திடீரென அமுல்படுத்த பட்டதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் அலிபிரி சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் கட்டுப்பாட்டுக் ஆக திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் பக்தர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய விதிமுறைகளை இரண்டு நாட்களுக்கு முன்பே அமுல் படுத்தி இருந்தாள் அதற்கு தகுந்தவாறு தங்கள் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வசதியாக இருந்திருக்கும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறைகளை ‘பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.