கொரோனா அறிகுறி! பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் 14 பேர் அனுமதி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரானா தொற்று உள்ளதா என தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்தின் பெயரில் மருத்துவரின் கண்காணிப்பில் அவர்கள் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளார்கள் .