JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த நிலையில் 4ஆவது முறையாக  தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் பல்வேறு முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.  கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் தான் அனைத்தும் பள்ளிகளுக்கும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு வெளியானது. அதேபோல் திரையரங்குகள் , ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அடைப்பு என பல்வேறு விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3ஆக உயர்ந்துள்ள நிலையில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கின்றது. அதேபோல நாளை பிரதமர் அனைத்து முதலமைச்சருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார். தமிழக முதலமைச்சரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடிய நிலையில் மாநிலத்தில் செய்யபட்டுள்ள முன்னேற்பாடுகள் என்னென்ன ? என்று சொல்ல வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது.