கொரோனா முன்னெச்சரிக்கை உச்சக்கட்டம்… எல்லையை மூடிய நாடுகள்..!!

ஜனவரி 1 வரை குவைத் விமான சேவையை நிறுத்துவதுடன் நாட்டின் எல்லையை மூடுகிறது. அதேபோல சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.

70 சதவிகிதம் அதிகம் தொற்றும் திறன் கொண்ட புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட விஷயம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் பிரிட்டன் கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், குவைத் நாடு அனைத்து வணிக விமானங்களையும் மற்றும் கடல் எல்லைகளை என ஒட்டுமொத்தமாக இன்று (திங்கள்கிழமை) இரவு 11 மணி முதல் ஜனவரி 1 வரை மூடும் என்று அரசு தகவல் தொடர்பு அலுவலகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அதேபோல சவுதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடின.