கொரோனா காலத்தில் இந்த 3 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…!!!

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாம் நம்மை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் தரக்கூடிய உணவுப் பொருட்களை கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகியுள்ளது. அப்படி நாம் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவுப் பொருட்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

இஞ்சி:

ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தை பிடிப்பது இஞ்சி. இது சளி மற்றும் இருமல், தொண்டை வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. இஞ்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனை நாம் டீ, சூப் போன்றவற்றில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

பூண்டு:

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள் என்றால் அது பூண்டு. அது மட்டும் இல்லாமல் உணவுகளில் கூடுதல் சுவையை தருகின்றது. இதை தவிர, பூண்டு உடலிலுள்ள இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும், பூண்டில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இயற்கையாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது.

இலவங்கப்பட்டை:

இது நாம் சமைக்கும் உணவில் வாசனை மற்றும் சுவையை அதிகரிப்பதற்கு பயன்படுகின்றது. இதை தவிர்த்து இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா பொருட்களில் ஒன்று. உடலில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை குறைக்க உதவுகிறது.எனவே, தொண்டை புண்ணுக்கு இவை ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டை இதய நோய்க்கான அபாயத்தையும் குறைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இது இன்சுலின் என்ற ஹார்மோனின் உணர்திறனை மேம்படுத்துவதால், நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *