கொரோனா இழப்பீடு இல்லை… மத்திய அரசு திடீர் முடிவு …!!

கொரோனா வைரஸ்க்கு மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு அறிவிப்பை திரும்ப பெற்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றிக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள, அந்த கடிதத்தில் இது பேரிடர் என்பதால் மாநில அரசுகள் தங்களிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். மத்திய அரசு ஒப்புதல் என்பது கட்டாயம் இல்லை.  கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் ரூபாய் வரை வழங்கலாம் என்று கூறி இருந்தது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது