கொரோனோவால் உண்டாகும் மன அழுத்தம்… மீள்வது எப்படி.? சில ஆலோசனைகள்..!!

கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

கொரோனா  வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து  விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்.

இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் உதவிக்கு கூட ஆள் இல்லாத நிலை ஏற்படும் போது மனம் அதிகமாக பதற்றமாகும். சோப்பினால் கை கழுவுதல் போன்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு செயல்களை சரிவர செய்தோமா? முக கவசம் சரியாக அணிதிருக்கோமா.?

என்ற சந்தேகங்கள் மனதில் அடிக்கடி வருவதால் திரும்ப, திரும்ப அந்த வேலைகளை செய்வதற்கு முற்படுவோம். தனிமையில் இருப்பதால் பிற உறவினர்களை சந்திக்க  முடியாமலும், அவர்களின் ஆலோசனைகளை பெற முடியாமலும் மனக்குழப்பத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். இது தீவிரமடையும் போது தான் தற்கொலை போன்ற  எண்ணங்கள் மனதில் எழும்.

இயல்பாக ஏற்படுகின்ற இருமல், தும்மல், மூச்சுத்திணறல் போன்றவை கூட கொரோனோவின் அறிகுறியாக இருக்குமோ என்று அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. விடுமுறை நேரத்தில் நெட்ஒர்க் பயன்பாட்டையே நம்பி இருப்பதால் அதிலிருந்து விடுபட முடியாமலும், அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கும் தள்ளப்படுகிறோம்.

பேரிடர் நீங்கி, சமூக அமைதி திரும்பிய பின்னரும், பேரிடர் காலத்தில் கடந்து வந்த எதிர்மறை சம்பவங்களின் பிரதிபலிப்பாக மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.
அரசு கூறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்போது மன அமைதியுடன் இருக்கவேண்டுமானால்,  இந்த தொற்று சார்ந்த தகவல்களை நம்பத்தகுந்த முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு உள்ள தகவல்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் பாரம்பரிய விளையாட்டுகள், குழந்தைகளுடன் உள்விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுங்கள். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு இக்காலத்தின் நாட்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

வாழ்க்கைக்கு தேவையான நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்கள், நீதி நெறி, நாளிதழ், நாவல்கள் சார்ந்த புத்தகங்கள் மற்றும் உங்களை கவர்ந்த புத்தகங்களை படிக்கலாம். அவ்வாறு படித்ததில் உள்ள கருத்துக்களை, கதைகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து விவாதியுங்கள்.  உங்களது  குழந்தை பருவத்தில் நீங்கள் செய்த சேட்டைகள், விளையாடியது,

என உங்கள் பருவநிலையில் அடைந்த அனுபவத்தை வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். தினமும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை நீங்களும் செய்யுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். அதனுடைய நன்மைகள் பற்றியும். வீட்டில் வழிபாடு, தியானம் மற்றும் கூட்டுப்பிரார்தனைகளில் ஈடுபடுங்கள் குடும்பத்தினரோடு மனம் மகிழ்ச்சியாகும்.

குடும்பத்தோடு செலவிடக்கூடிய இக்காலத்தை ஒரு பொன்னான காலம் என்றே மனதில் பதிய செய்யுங்கள்.  மன உளைச்சல் அதிகரிக்கும் இக்காலங்களில் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் பதிய செய்யுங்கள். மனதிற்கு இனிமையான மெல்லிய இசை, ஊக்கம் தரும் பாடல்கள் கேளுங்கள். இவையெல்லாம் இப்பொழுது பயனுள்ளதாக மாற்றி கொள்ளுங்கள்.

யோகா நித்ரா போன்ற தளர்வு பயிற்சிகளை செய்யுங்கள்.  இந்த காலத்தில் மன வலிமை மிகவும் தேவை. மேலும்  சிந்தனை திறன், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் அகியவற்றை உங்களிடையே வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முற்படும் பொழுது என்னால் முடியும் என்ற மனநிலையோடு செய்ய தொடங்குங்கள்.

இவ்வாறு செயல்ப்பட்டால் கொரோனோவால் ஏற்படும் மனஉளைச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *