“கொரோனா” LOCK DOWN மட்டும் போதாது….. பரிசோதனை வேண்டும்….. WHO அறிவுரை….!!

கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே  கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிகப்பெரிய நாடுகள் ஒரே திட்டமாக லாக்டவுன் திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கள் வெளியில் நடமாட விடாமல் செய்து கொரோனாவை தடுத்து வருகின்றனர். இது ஒரு நல்ல திட்டம் ஆனால் இது மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த போதாது. மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பரிசோதனை மிக குறைவாகவே உள்ளது. நாள் ஒன்றுக்கு 1500 க்கும் குறைவான பரிசோதனைகளே  நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வரக்கூடிய வாரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனையை நிகழ்த்த களமிறங்க உள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன தொடர்ந்து ஊரடங்கு கடைபிடித்து நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பது வழங்குவது மிக நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *