கொரோனா தாக்கம் : ”ட்வீட்டர் எடுத்த அதிரடி முடிவு” பெருகும் ஆதரவு …!!

கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து.  இதை நாம் பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்ற வதந்திகள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து டுவிட்ட ர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள தகவலில் கொரோனாவுக்கு இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனாவுக்கு இதுதான் மருந்து என்று தவறாக வெளியாகும் தகவல்கள் நீக்கப்படும். வதந்தியாக பரப்படும் மருந்துகளால் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லை என்றாலும்  இது தீர்வாகாது. எனவே இதுபோன்ற ட்வீட்டுகள் நீக்கப்படும்.மேலும் தனிமை படுத்துவதன் மூலம் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாது என்று  பதிவிடப்படும் ட்வீட்டும் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *