கொரோனா தாக்கம் : உலக போரை விட மிகப்பெரிய சவால் – மோடி எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் ,

தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை.  கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது.

திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது.மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது. 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.