கொரோனா தாக்கம் : டீக்கடைகள் , உணவகங்களுக்கு கட்டுப்பாடு ….!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீ கடைகளுக்கு பல்வேறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வேகமாக மேற்கொண்டு வருகின்றது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு டீ கடைகளிலும் வெந்நீர் ஊற்றி கிளாஸ் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த கிளாஸ் மூலம் டீ வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல உணவகங்களுக்கு வரக்கூடியவர்களுக்கு கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ? என்ன செய்யவேண்டும் ? எப்படி கைகளை வேண்டும் ? எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் ? என்று அறிவுறுத்த வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சமையல் மாஸ்டர்கள் , டீக்கடையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சளி , இருமல் ஏதும் இருந்தால் உடனடியாக பொது சுகாதாரத்துறை அதிகாரியை அணுகவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதே போல ஹோட்டலில் வேலை செய்யக்கூடிய பணியாளர்களுக்கும் , ஹோட்டலில் உணவு தயாரிக்கக் கூடிய தொழிலாளருக்கும் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அங்கே உள்ள பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகர்கள் காலையில் எழுந்து தினம்தோறும் தேனீர் அருந்த கூடிய பழக்கத்தை கொண்டிருப்பதால் அதன் மூலமாக ஏதும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால், அதற்காக நடவடிக்கையாக தேனீர் கடைகளில் குறிப்பாக சுடு தண்ணீரை ஊற்றி , சோப்பு போட்டு கழுவிய பிறகே டீ கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.