கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய தனியார் நிறுவனகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகினால் அதிக நபர்களுக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு தற்போது அரசு ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில்,ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவற்றில் மட்டும் இந்த சோதனை நடந்து வந்த நிலையில் அதிக அளவில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தால் அதனை சமாளிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களும் இந்த சோதனைகளை செய்யலாம் என அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதற்காக 18 தனியார் அமைப்புகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டால் கட்டணம் இருக்கும் எனவே அதிகமான கட்டணம் விதிக்க கூடாது என்ற கட்டுப்பாடும் அரசு விதித்துள்ளது. கொரோனா அதிகரிக்கும் போது சோதனை அதிகம் செய்ய இருக்கும் நிலையை உணர்ந்து மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.