கொரோனா அச்சம்…… புதிய உத்தரவு…… 5 பேர் செல்ல தடை…… டெல்லி அரசு அதிரடி…..!!

டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிலையங்களுக்கு அதிகாரப்பூர்வமாக மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் புதிய உத்தரவு ஒன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஐந்து பேருக்கும் மேலாக ஒன்றாக சேர்ந்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முடிந்த அளவுக்கு நட்பு வட்டாரங்களை இக்காலகட்டத்தில் சுருக்கிக் கொள்ளவும் வெளியில் சேர்ந்து செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.