கொரோனா அச்சம் : ”பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டபடட நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சென்னை போரூர் தனியார் பல்கலைக் கழகத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்திற்கு கழகத்தில் இளநிலை படிப்பு வகுப்புகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.