“கொரோனா அச்சம்” நீங்க வாராதீங்க…. நாங்க வாரோம்….. அமேசான் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசித்து வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகள் உள்ளிட்டவையும் மார்ச் 31ம் தேதி வரை ஆங்காங்கே அதிக அளவில் மூடப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மருந்து மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அமேசான் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்பவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆன்லைனில் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக இது போன்ற நடவடிக்கைகளை அமேசான் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.