“கொரோனா அச்சம்” 700 கப்பல்…… 25,000 பயணிகள்…… இந்தியாவில் தரையிறங்க மத்திய அரசு மறுப்பு…!!

கொரோனா  வீடியோ சர்ச்சை  காரணமாக 700 கப்பல்களில் இதுவரை 25 ஆயிரம் பயணிகள் இந்தியாவில் தரையிறங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின்  தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள்  கொண்டுவருவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,

இதுவரை 700 கப்பல்களில் உள்ள இருபத்தைந்தாயிரம் பயணிகளை இந்தியாவில் இறங்குவதற்கு  மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் அவர்களுக்கு வைரஸ் இருக்கிறதா? என்று பரிசோதிக்க மருத்துவ குழு நிர்ணியக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளும் மத்திய அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் சில நாட்களுக்கு அவர்கள் இந்திய தரையில் கால் வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.