கொரோனா எதிரொலி!…. ரயில்களில் சீனியர் சிட்டிசன்ஸ் பயணிகளின் எண்ணிக்கை சரிவு…. ஆய்வில் தகவல்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் தான் மிக குறைந்த அளவில் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 5.5 கோடி சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 7.2 சீனியர் சிட்டிசன்களும், 2018-19 ஆம் ஆண்டில் 1.9 கோடி சீனியர் சிட்டிசன்களும் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாகத்தான் ரயில்களில் சீனியர் சிட்டிசன்களின் பயணம் அதிக அளவில் குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.