கொரோனா எதிரொலி – மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் தயாரிப்பு பணி தள்ளிவைப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு. முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கடும் என கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *