கொசுக்கள் மூலம்…. கொரோனா பரவாது….. சுகாதாரதுறை தகவல்….!!

கொசுக்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவி பாதிப்புக்குள்ளான மக்களிடமிருந்து கொசு மூலம் பரவும் என்று அச்சம் அடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதி அளித்துள்ளது.

மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பிறகு அது பரவாமல் தடுப்பதற்காக முக கவசம் அணியலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் பணிவிடை செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *