பாதிக்கப்பட்டோர் 68,203…. பலி 1,027….. அமெரிக்காவில் சோகம்….!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபுறம் தீவிரம் காட்டி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,347 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் மற்றும் 247 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகமாவதால் அதனை கட்டுப்படுத்துவதில்அமெரிக்கா அரசு மேலும் தீவிரம் காட்டி வருகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *