தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதனிடையே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பிப்.15 முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த பயணிகளை கணக்கிட்டு கண்டறிய வேண்டுடியுள்ளது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *