“கொரோனா விழிப்புணர்வு” ரூ1க்கு சிக்கன் பிரியாணி…… சென்னையில் அசத்தல் OFFER….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கவும் சென்னையில் கடை உரிமையாளர் ஒருவர் ரூ1 க்கு சிக்கன் பிரியாணியை விற்பனை செய்தார்.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலமாக வருவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதனைக் கேட்ட மக்கள் பிராய்லர் கோழி வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து வரும் சூழ்நிலையில், அதன் விலை சரமாரியாக குறைந்தது.

இது பிராய்லர் கோழி விற்பனையாளர்களிடம் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அந்தக் கோழியை வாங்கி சமையலில் பயன்படுத்தும் ஹோட்டல்களிலும் சிக்கன் வாங்குவதை தவிர்ப்பதால் பெரும் நஷ்டம் பலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனை பொய் என நிரூபிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

சென்னை மாவட்டம் பொன்னேரியில் ஒரு கிலோ பிரியாணி ரூபாய் ஒன்றுக்கு விற்கப்பட்டது. அதன்படி 11 மணி அளவில் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் 120 கிலோ பிரியாணி சரசரவென விற்று அமோக விற்பனை ஆனது நடைபெற்றது.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், பிராய்லர் கோழி மூலமாகத்தான் கொரோனா தாக்கம் அதிகரிப்பதாக  வதந்திகள் பரவி வருகின்றன. அதை பொய்யென நிரூபிக்கவே இப்படி ஒரு அதிரடி சலுகை வழங்கினோம். தற்போது பிரியாணி அண்டா காலியாகிவிட்டது. சிக்கன் மூலம் கொரோனா பரவவில்லை என்பது உறுதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.