புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *