கொரோனா அறிகுறி இருப்பதால்….கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் -மனைவி ….இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் ,அவருடைய  மனைவிக்கும் கொரோனா   அறிகுறி இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

கடந்த 2012 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர்  புவனேஷ்வர்  குமார் . தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் , காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அவர் டி 20 அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது . உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் தன் குடும்பத்துடன் புவனேஸ்வர் குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா  அறிகுறி இருப்பதால் புவனேஷ்வர் குமார் ,அவரது மனைவி இருவரும் தங்கள்  வீட்டில், மருத்துவரின் ஆலோசனைப்படி  தனிமைப்படுத்தி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *