“கொரோனா” 2,300 பேர் பாதிப்பு….. பீதியில் தவிக்கும்….நியூயார்க் நகரம்…..!!

நியூயார்க் நகரில் மட்டும் 2,300 பேர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனோ வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி,

நியூயார்க் நகரத்தில் மட்டும் சுமார் 2,300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்நகர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.