இனிமேல் நான் என்ன பண்ண போறேன்…. தொழிலாளிக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் மேகநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்து மேகநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மேகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மற்றொரு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.