வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.