பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 22 வயதுடைய கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது. இதனால் இதுவரையும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.