ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்பெட்டா கிராமத்தில் லகுமய்யா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லகுமய்யா பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த யானை அவரை ஓட ஓட துரத்தியது. பின்னர் தும்பிக்கையால் லகுமய்யாவை தூக்கி வீசி காலால் மிதித்து விட்டு அங்கிருந்து சென்றது.

இதற்கிடையே லகுமய்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.